பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுபணிகளை கலெக்ட்ர் பல்லவி பல்தேவ் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      தேனி
jallikkatu  16 3 18

தேனி.- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தினை வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, பிறதுறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர்களுடன்   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்கள் அமருமிடம் அமைக்கும் பணி, காளைகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள், காளைகள் நிறுத்துவதற்கான இடங்கள், காளை உரிமையாளர்கள் காளைகளை வீடுகளுக்கு சேகரித்துச் செல்ல அமைக்கப்பட்டுள்ள இடங்கள், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர், கழிப்பறை, போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ப்பட்டு வரும் முன்னேற்பாடுப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசின் உத்தரவின்படி,
பல்லவராயன்பட்டி கிராமத்தில் வருகின்ற (18.03.2018) அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் அரங்கத்தினை போதிய இடவசதியுடன் அமைத்திடவும், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் காயம் ஏற்படா வண்ணம் 15 மீட்டர் தூரத்திற்கு தென்னை நார்களை கொண்டு பரப்பி வைத்திடவும், காளைகள் பொதுமக்கள் அமருமிடங்களுக்கு தாவிசெல்லாமல் தடுப்பதற்காகவும், பார்வையாளர்கள் மாடத்திலிருந்து இப்பகுதியை பிரிக்கும் வகையிலும் உறுதியான இரட்டை தடுப்பு வேலிகளை அமைத்திடவும், ஜல்லிக்கட்டு நடைபெறும் அனைத்துப்பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் அகன்ற மின்னணு திரை கொண்ட தொலைக்காட்சியினை அமைத்திடவும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்கு ஏதுவாக தனி அரங்கம் அமைத்திடவும், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளை கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணித்திடவும், காளைகள் இயல்பாக இருக்கும் வகையில் போதுமான இடவசதியோடு காளைகளை  வைத்திருக்கும் களம் அமைத்திடவும், ஒவ்வொரு காளைகளுக்கும் குறைந்தபட்சம் 60 அடி இடம் வழங்கி, காளைகளை குழுக்களாக பிரித்து வரிசைப்படுத்தி அனுப்பிடவும், முன் வரும் காளைகளுக்கு முன்னுரிமை அளித்து, களத்திற்கு அனுப்பிடவும்,  காளைகளுக்கு போதிய உணவு, தண்ணீர் வசதிகள் ஏற்படுத்துவதை உறுதிசெய்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 மேலும்,   , ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் ஒருங்கிணைந்து முன்னேற்பாடுப்பணிகள் மேற்கொள்ள ஆலேசானைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து