முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி: சென்னையின் எப்.சி. அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா? பெங்களூருடன் இன்று பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு: ஐ.எஸ்.எல். கால்பந்து கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று பெங்களூரில் நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி.- பெங்களூர் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

10 அணிகள்
4-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி தொடங்கியது. இதில் சென்னையின் எப்.சி., பெங்களூர் எப்.சி., கோலா, புனே சிட்டி, கொல் கத்தா, கேரளா பிளாஸ் டர்ஸ், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி, டெல்லி டைடோமஸ், கவுகாத்தி ஆகிய 10 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற தலா 2 முறை உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் மோதின. மொத்தம் 90 லீக் ஆட்டங்கள் நடந்தது.

பெங்களூரு முன்னேற்றம்
மார்ச் 4-ம் தேதி முடிந்த லீக் ஆட்டங்கள் முடிவில் பெங்களூர் எப்.சி. (40 புள்ளி), சென்னையின் எப்.சி. (32), எப்.சி. கோவா (30) புனே சிட்டி ஆகிய (30) 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அரை இறுதி முதல் சுற்று ஆட்டங்களில் பெங்களூர் - புனே மோதிய போட்டி கோல் ஏதுமின்றியும், சென்னையின் எப்.சி.- கோவா மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கிலும் டிராவில் முடிந்தது. அரை இறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் பெங்களூர் 3-1 என்ற கோல் கணக்கில் புனேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பட்டம் வெல்லும்...
மற்றொரு அரை இறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று பெங்களூரில் நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி.- பெங்களூர் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னணி சாம்பியனான சென்னை 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. 2015-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் கோவாவை வீழ்த்தி சென்னை சாம்பியன் பட்டம் வென்றது. 2-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

லால்பேக்குவா...
சென்னையின் எப்.சி. அணியில் நட்சத்திர வீரராக இந்தியாவின் ஜெ.ஜெ. லால்பேக்குவா உள்ளார். அவர் இதுவரை 9 கோல்கள் அடித்து உள்ளார். மேலும் கேப்டன் ஹென்றி சேரேனோ (போர்ச்சுக்கல்), தனபால் கணேஷ், அனிருத் தாபா, ஐனிகோ கால்டெர்ன் (ஸ்பெயின்), ரபேல் ஆகஸ்டோ (பிரேசில்), முகமது ரபிக், மெயில்சன் ஆல்விஸ் (பிரேசில்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இதனால் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

பெங்களூரு ஆர்வம்...
பெங்களூர் எப்.சி. அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணியில் கேப்டன் சுனில் சேத்திரி முதுகெலும்பாக உள்ளார். மேலும் டோனி (ஸ்பெயின்), மிக்கு (வெனிசூலா), எரிக் பார்டலு (எஸ்டோனியா) போன்ற வீரர்கள் உள்ளனர். அந்த அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் மோதிய இரண்டு லீக் ஆட்டத்தில் தலா ஒரு வெற்றி பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து