முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மார்க் டெய்லர் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன்: தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டும் என்று மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

டி காக் அசத்தல்...
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேலான இலக்கை சேஸிங் செய்து கொண்டிருந்தது. தொடக்க வீரர் மார்கிராம் உடன் இணைந்து குயிண்டான் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது டி காக்கிற்கும் வார்னருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இந்த மோதம் விளையாட்டு முடிந்து வீரர்கள் தேனீர் இடைவேளைக்காக டிரெஸ்ஸிங் அறைக்கு சென்ற பின்னரும் தொடர்ந்தது.

2-வது போட்டியில்...
வார்னர் டி காக்கை அடிக்கும் நோக்கத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை சக தோழர்கள் சமாதானம் படுத்தினார்கள். இந்த பிரச்சினை ஐசிசி நடுவர்கள் கவனத்திற்குச் சென்றது. இருவரும் தடை ஏதும் பெறாமல் அபராதத்துடன் தப்பினார்கள். 2-வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஐசிசி நடுவர் இருநாட்டு கேப்டன்களையும் அழைத்து பேசினார். அப்போது வீரர்கள் மோதலில் ஈடுபடக்கூடாது என வலியுறத்தப்பட்டது.

3-வது டெஸ்ட்...
ஆனால், போட்டியின் போது ரபாடா ஸ்மித் மற்றும் வார்னர் உடன் மோதல் போக்கை கையாண்டார். குறிப்பாக ஸ்மித்தை வெளியேற்றிய சந்தோசத்தில் ஸ்மித் தோளோடு இடித்தார். இதனால் ரபாடா இரண்டு போட்டிகளில் விளையாட தடைபெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (23-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டியின்போது மோதலில் ஈடுபடக்கூடாது, இரு நாட்டு வீரர்களும் இறுதி எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இயகுனரும் ஆன மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.

ஆஸி. வீரர்களும்...
இதுகுறித்த மார்க் டெய்லர் கூறுகையில் ‘‘இரண்டு அணிகளும் அவர்களுடைய இறுதி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் கட்டாயம் ஆஸ்திரேலியா அணியும் அடங்கும். பேட்ஸ்மேன்கள் அவுட்டாகும்போது பேட்ஸ்மேன் முகத்திற்கு நேராக சென்று சந்தோசத்தை வெளிப்படுத்துவது அதிக அளவில் காணப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் எப்படி குற்ற செயல்பாட்டில் ஈடுபட்டார்களோ, அதேபோல் ஆஸ்திரேலிய வீரர்களும் செயல்பட்டார்கள்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து