முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலம் சோனா கல்லூரியில் பெண்கள் தினம் கொண்டாட்டம்

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் சோனா கல்லூரியில் பெண்கள் தினம் கொண்டாட்டம் சேலம் சோனா கல்லூரியில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.. இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி மற்றும் தேனி தேசிய வளங்கள் மேலான்மை அறக்கட்டளை இயக்குனர் மற்றும் நிறுவனர் அருணா தேவாராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எப்படி முன்னேரவேண்டும் என்றும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக தொழில் மற்றும் கல்வி துறையில் முன்னேறி வருகின்றனர், தற்போது பெண்கள் அனைத்து துறைகளிளும் குறிப்பாக கனிணி, தொழில்நுட்ப பிரிவு, சிவில் இன்ஜீனியர் ஆகிய துறைகளில் தனது காலடியினை பதித்து வருகின்றனர். வாய்ப்புகளை மேல்காட்டிக்குகொள்ளாமல் அதை முழுமையாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும். பெண்கள் சுயதொழில் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் ரோஹிணி பேசினார்கள். பெண்கள் குடும்ப வாழ்க்கையில் தனித்துவம் பெற வேண்டும். பெண்கள் பெண்களை மரியாதையுடன் நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல் பெண்கள் ஆண்களையும் மரியாதையுடன் நடத்த கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் பெண்குழந்தைகளை தன்னம்பிக்கையை ஊட்டி வளர்க்கவேண்டும். பெண்களை எப்பொழுதும் தகாத முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். பெண்கள் தங்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேறிய பெண்களை முன் உதராணமாக கொண்டு செயல்பட வேண்டும். அன்னை தெரசா, முன்னள் முதல்வர் ஜெயலலிதா, ஜான்சிராணி, கல்பனாசாவ்லா போன்றோர்களை முன் உதாரணாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் முதலில் தங்களின் பெற்றோர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எப்பொழுதும் தடைகள் அதிகமாக இருக்கும். அதை தன்னம்பிக்கையுடன் தடைகளை நீ்க்கி முன்னேற வேண்டும் என்று பெண்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து