முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பி நாட்டை பிளவுபடுத்துகிறது பா.ஜ.க: ராகுல் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி, பா.ஜ.க நாட்டை பிளவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 2 நாள் தேசிய அளவிலான 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், காங்கிரஸ் கட்சி மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.  இதில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மாநாட்டுக்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்து பேசியதாவது,

காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கு இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு வெறுப்பும், அன்பும் தான். மோடியால் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.  - ராகுல்

இந்த மாநாட்டின் நோக்கம் 2019 ஆண்டு தேர்தலுக்கு எப்படி நாம் தயாராவது. காங்கிரஸ் கட்சி எப்படி செல்வது போன்றவற்றை ஆலோசிப்பதாகும். நாட்டில் தற்போது முக்கியப் பிரச்சினைகளான இருக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவைகளில் இருந்து மக்களை திசை திருப்ப வெறுப்புணர்வை ஆயுதமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க பயன்படுத்துகிறது.

ஆனால், இதுபோன்ற செயல்களை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி செய்யாது. இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.கவுக்கு இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு வெறுப்பும், அன்பும் தான். மோடியால் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். இந்த நாடு அனைத்து மக்களுக்கானது. அனைத்து சாதியினர், மதத்தினர் என அனைவருக்கும் உடையது. காங்கிரஸ் செய்யும் அனைத்து செயல்களும் மக்களின் நலனுக்கானது, எந்த பிரவினரும் ஒதுக்கப்படமாட்டார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து