முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார்.

நாஞ்சில் சம்பத், 2012-ல் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.கவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் முதன்மை பேச்சாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு இனோவா காரையும் வழங்கினார் ஜெயலலிதா.

இதனிடையே ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சசிகலாவை எதிர்த்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே, டிடிவி தினகரன் புகழ் பாட ஆரம்பித்தார். அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்ன வழக்கில் டெல்லி சிறையில் இருந்து தினகரன் சென்னை திரும்பிய போது விமான நிலையம் சென்ற இருவரில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர்.

இந்நிலையில்,தினகரனுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத், கடந்த வாரம் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் திராவிடம் இல்லை என்று கூறி பொதுக்கூட்டத்தை புறக்கணித்தார்.

இந்நிலையில், தினகரன் செயல்பாட்டால் கசந்து போன நாஞ்சில் சம்பத், தினகரனின் புதிய அமைப்பின் பெயரில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அண்ணாவும் திராவிடமும் இல்லாத அணியில் என்னால், அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு பேச முடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என தினகரன் நம்புகிறார். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும்  இல்லை என்று  அதிரடியாக அறிவித்துள்ளார்.

தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவர் அண்ணா, மனிதனை மனிதனாக எண்ணியதன் பெயர் திராவிடம். திராவிடமும் அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்றவர் பட்டபகலில் பச்சைப்படுகொலை செய்து விட்டார் தினகரன் என்றும் தெரிவித்தார். அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் அவர் அறிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து