முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்: மாநில தலைவர் விஸ்வநாதன் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த காவேரியாம்பூண்டி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.கேசவன் தலைமை தாங்க, மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.சுப்ரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மலை ஒன்றிய அமைப்பாளர் பி.ராமலிங்கம் வரவேற்றார். புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்திரான கலந்து கொண்ட மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

செயற்குழுக் கூட்டம்

தமிழகத்திற்கு விருது வழங்குவதற்கு பதிலாக காவிரியில் தண்ணீரை பிரதமர் பெற்றுத்தர வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட காலத்துக்குள் காவரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தென்பெண்ணையாறு, பாலாறு மற்றும் சிறுவாணியில் அணைக்கட்டும் அண்டை மாநிலங்களின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்காமல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. மின்சாரத்தை முழுமையாக வழங்கினால் விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளும் கிடைக்கும்" என்றார். இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைப்பாளர்கள் ஏ.காசி, என்.கவியரசன், சி.ஏழுமலை, இ.இராசப்பன், வி.ராஜா, த.முனியப்பன், மற்றும் சங்க நிர்வாகிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து