முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக மாவட்டசெயலாளர் ரவிக்கு அரக்கோணம் வக்கில்கள் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

அஇஅதிமுகவின் வேலூர் மாவட்ட செயலாளராக நியமிகப்பட்ட சு,ரவி எம்எல்ஏ விற்கும், உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமினம் பெற்ற உள்ளுர் வக்கில் ஆர்.பிரதாப்குமாருக்கும் அரக்கோணம் வக்கில் சங்கத்தினர் சார்பில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து விவரம் வருமாறு. அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினராகவும், உள்ளுர் வக்கிலாகவும் பணியாற்றி வரும் சு.ரவி அஇஅதிமுக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கபட்டார்.

பாராட்டு கூட்டம்

இந்நிலையில் அரக்கோணம் வக்கில் சங்கத்தின் சார்பில் முதல் பாராட்டு கூட்டம் நடத்தலாம் என கூடி முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பாராட்டு கூட்டம் விடுதியில் நடைபெற்றது. இந்த பாராட்டு கூட்டத்திற்கு வக்கில் சங்கத்தின் தலைவர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் என்.தமிழ்மாறன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் குரமகுரு, குட்டிபாலு, பூபதி, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முத்த வழக்கில்களான முகமது ஜமாலுதீன், நாகரத்தினம், கணபதி, மற்றும் ஆறுமுகம், வெங்கடேசன், ஆனந்தன், பிரபாகரன், உள்ளிட்டவர்கள் வக்கில்களும் பாராட்டி பேசினார்கள். வக்கில்களின் பாராட்டுகளை ஏற்று கொண்ட தொகுதி எம்எல்ஏவும், வேலூர் மாவட்ட செயலாளருமான சு,ரவி பேசிய போது அமர்வு நீதிமன்றம் வேண்டுமேன கோரிக்கை விடுத்தீர்கள் அதனை கொண்டு வருவதில் எள்ளவும் சிக்கல்யில்லை அதே நேரத்தில் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கான எற்பாடுகளை மட்டும் விரைவாக செய்யுங்கள் எனகேட்டுகொள்கிறேன். உயர் நீதிமன்றத்தில் அரசு வக்கிலாக பணியாற்ற சிபாரிசு கேட்டு பிரதாப்குமார் என்னை நாடியபோது அந்த பதவி கிடைத்தால் நீதியரசராகும் வாய்ப்பு அவருக்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே,

அரக்கோணத்தை சேர்ந்தவர் நீதியரசாக வரவேண்டுமென முடிவு எடுத்து பரிந்துறை செய்தேன். பஸ்நிறுத்தம் கேட்டீர்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்றும் பேசினார். முன்னதாக தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி வக்கில்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டி போடும் வேட்பாளர் அமல்ராஜ் கூட்டத்தினரிடையே வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் திரளான வக்கில்களும், ஏஜி.விஜயன், பழனி, பிரகாஷ், ஆறுமுகம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் இறுதியாக பொருளாளர் எம்.ஹரிபாபு நன்றி கூறிய போது மாவட்டசெயலளர் சு.ரவி மந்திரியாகவும், அரசு வக்கில் பிரதாப்குமார் நீதியரசராகவும், பார்கவுன்சில் சேர்மனாக அமல்ராஜ் பதவியேற்று கொள்ளும் நாள் விரைவில் வரும் அன்று இதே இடத்தில் முப்பெரும் விழாவாக கொண்டாடுவோம் என்று பலத்த கரகொலிக்கு மத்தியில் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து