கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன் உதவி அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      தர்மபுரி
1

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா, காரிமங்கலத்தில் 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட ஆணை வழங்கும் விழா கலெக்டர் எஸ்.மலர்விழி தலைமை நடைபெற்றது.

கடன் உதவி

3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 இலட்சம கடன் உதவிகளையும், 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைத்தும் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட 59 பயனாளிகளுக்கு ரூ.22.20 இலட்சம் மதிப்பிலான ஆணைகளையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். பின்னர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் அரசின் காரிமங்கலம் வட்டம் கெரகோடஅள்ளியில் கூட்டுறவுத்துறையின் தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ள 46 உறுப்பினர்களுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பில் கடன்; உதவிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்திட 59 பயனாளிகளுக்கு ரூ.22.20 இலட்சம் மதிப்பிலான ஆணைகளையும் மற்றும் 2 பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையின் சார்பில் பயிர் கடன் வழங்கிட ரூ.8000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கிட ரூ.124 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 15 மார்ச் 2018 வரை தருமபுரி மாவட்டத்தில் 30,005 விவசாயிகளுக்கு பயிர்கடனாக ரூ.145.05 கோடி கடன் வழங்கி சாதனைப் படைத்துள்ளது.

மேலும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான கடன்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் சமூகத்தை சார்ந்தவர்களின் பொருளாதாரநிலையை உயர்த்தும் வகையில் 4மூ வட்டியில் டாப்செட்கோ கடன் வழங்கிட ரூ.8.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 15 மார்ச் 2018 வரை ரூ.13.30 கோடி கடன் 3028 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மத்திய காலக்கடன் ரூ.9.80 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 1395 விவசாயிகளுக்கு ரூ.11.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.16.85 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2636 பயனாளிகளுக்கு ரூ.6.76 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகடன் ரூ.45 இலட்சம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 432 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.96 இலட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறு வணிக கடன் ரூ.2.55 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 2647 சிறு வணிகர்களுக்கு ரூ.3.79 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. தானிய ஈட்டுக்கடன் ரூ.6.85 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 370 விவசாயிகளுக்கு ரூ.7.34 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 இருசக்கர வாகனம்

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2097 பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் பணிபுரியும் இடத்திற்கு எளிதாக சென்றுவர இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். 2017-18ஆம் ஆண்டில் ஊரக பகுதியில் 1725 மற்றும் நகர் பகுதியில் 372 ஆக மொத்தம் 2097 அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே விவசாய பெருமக்கள் தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களை அணுகி பயிர் கடன் உள்ளிட்ட கடன்களை பெற்று அதனை முறையாக திரும்ப செலுத்திட வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு கடன் உதவிகளை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திகொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்; மாணிக்கம், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், தொழில்நுட்ப கூட்டுறவு சங்கத்தலைவர் தலைவர் காவேரி, கூட்டுறவு கடன் சங்கம் தலைவர்கள் கோவிந்தசாமி, சம்பத்;, செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராஜ், வட்டாட்சியர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடரமணன், வடிவேலன் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து