துாத்துக்குடி மாவட்ட கூட்டுறவுசங்க தேர்தலில் வியூகம் அமைத்து துரோகிகளை வீழ்த்துவோம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      தூத்துக்குடி

கூட்டுறவு சங்க தேர்தலில் வியூகம் அமைத்து துரோகிகளை வீழ்த்துவோம் என துாத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பேசினார்.

ஆலோசனை கூட்டம்

துாத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் துாத்துக்குடியில் நடைபெற்றது.துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் சித செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  பேசியதாவது,கடந்த 2013 ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூட்டுறவு தேர்தல் நடைபெற்றது.இதில் 90 சதவித சங்கங்களை அதிமுக கைப்பற்றி 5 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்களை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றோம்.இத்தேர்தல் மூலம் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் பதவிக்கு வந்தனர்.தற்போது ஜெ.,மறைவிற்கு பின் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் முதல்முதலாக தேர்தலை சந்திக்க உள்ளோம்.இந்த தேர்தலில் துரோகிகளும்,எதிரிகளும் களத்தில் இறங்கஉள்ளனர்.இவர்களை வியூகம் அமைத்து குழுவாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.இதில் துரோகிகள் எதிர்கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடலாம்.இதில் அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு நமக்குள் போட்டி,பொறாமை இன்றி சமாதானமாக பேசி போட்டியிட வேண்டும்.பிரச்சனைகள் இருந்தால் மாவட்ட செயலாளரிடமோ,என்னிடமோ தகவல் தெரிவித்தால் சமாதானம் பேசி முடிவெடுக்கப்படும்.இந்த தேர்தலில் பதவி கிடைக்காதவர்களுக்கு வரும் உள்ளாட்சி தேர்தலில் பதவி கிடைக்கும்.துாத்துக்குடி மாவட்டத்தில் 249 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.இதற்கு நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.இதில் அதிக இடங்களை கைப்பற்றினால் தான் துாத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை கைப்பற்ற முடியும்.எனவே அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிக்கனியை கைப்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ.கள் மோகன், சின்னப்பன், நீலமேகவர்ணம்,முன்னாள் பஞ்.,தலைவர் சின்னத்துரை, கூட்டுறவு வங்கி தலைவர்கள் பிடிஆர் ராஜகோபால்,ஏசாத்துரை, அச்சக கூட்டுறவு சங்கங்களின் தலைவர் பொன்ராஜ் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ஞானகுருசாமி, சண்முகவேல்,அதிமுக நிர்வாகிகள் சேகர், குருத்தாய், முருகானந்தம், டார்சன்,கேடிசி சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் மேற்கு பகுதி செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து