முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவம்

இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் தேன் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மாகா தீபாரதனை நடந்தது.நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வரி கை புரிந்து சாமி தரிணம் செய்தனர். இதையடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு ஏல வாழ்குழலி உடன் ஏகாம்பரநாதர் அலங்காரத்தில்  மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 .மணிக்கு மேளம் தாளம் முழங்க உற்சவர் அங்காளம்மமனை கோவில் மண்டபத்திலிருந்து வடக்குவாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு சென்று ஊஞ்சலில் வைத்தனர் இதனை தொடர்ந்து கோவில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர் இதையடுத்து அம்மனுக்கு மாகா தீபாரதனை நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான  பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனை மீண்டும் கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்

இதில் சென்னை காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரி கர்நாடகம் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிணம் செய்தனர்.விழாவில் விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மண்டல உதவி ஆணையர் ஜோதி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிணம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் பிரகாஷ் கோவில் அறங்காவல் குழு தலைவர் கணேசன் அறங்காவலர்கள் ஏழுமலை செல்வம் ரமேஷ் சரவணன் சேகர் மணி கோவில் ஆய்வாளர் அன்பழகன் மேனேஜர் மணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர் செஞ்சி டி.எஸ்.பி.ரவிசந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து