முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: இளைஞர்கள் முனைப்புடன் செயல்பட்டால் இந்தியா விரைவில் முன்னோடியாக திகழும் - இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் சாதனையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரோ செயற்கைகோள் மையம் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
 
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்., இஸ்ரோ மூலம் இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகேள்கள் அனைத்தும் அதற்குரிய பணியை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. விண்வெளித்துறையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நம் நாட்டிலேயே செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில் அனுப்புகிறோம் இதுமட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் தேவையான செயற்கைக்கோள் பாகங்களை நாம் தயாரித்து தருகிறோம்.  இதுபோல பல துறைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வருங்காலங்களில் இளைஞர்கள் முனைப்புடன் செயல்பட்டால் இந்தியா விரைவில் முன்னோடியாக திகழும். இந்தியா விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததைதபோல தொழில்நுட்பத்திலும் தன்னிறைவு பெற வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்காணிக்க புதிய செயற்கைகோள் செலுத்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர், இயற்கை சூழலை முன்கூட்டியே சொல்லும் வகையில் ஒரு செயற்கைகோள் உள்ளது. இது நிலத்தில் வசிப்பவர்களை எளிதில் கண்காணிக்க முடிகிறது. கடலில் சூழ்நிலை மாறுபாட்டால் மீனவர்களுக்கு வழங்கப்படும் கருவிகளை கடலுக்கு எடுத்து சென்றால் அவர்களை எளிதில் கண்காணிக்க இயலும். இந்தியாவில் திறமையுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது. ஆனால் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கைவிட்டு அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து