முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: மதுரை பழங்காநத்தம் பகுதியில் 18 ஆண்டுகள் கழித்து ஜல்லிக்கட்டு போட்டி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் கிராமத்தில் அருள்மிகு ஊர்காவலன் எனற கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று 18 ஆண்டுகள் கழித்து ஊர் பாரம்பரியம்மிக்க ஜல்லிக்கட்டு போட்டி இன்று துவங்கியது.
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்  செல்லூர் ராஜு கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று உள்ளன.மாடுகளை அடக்க 400க்கும் மேற்ப்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.வீரர்கள் ஒவ்வொரு சுற்றுக்கு 100 பேர் வீதம் 2 மணி நேரம் விளையாட அனுமதிக்கபடுவார்கள் மேலும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு தங்ககாசு, கட்டில், பீரோ, மோட்டார் வாகனம் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது .இந்த ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பான முறையில் 600க்கும் மேற்ப்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,மேலும் போட்டியில் பங்குபெறும் மாடுப்பிடு வீரர்கள்களுக்கு  காயம் ஏற்பட்டால் 108  மொபைல் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்க பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து