முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.4,000 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் முழு அளவிலான தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மோசடிகளும், கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரேக் அல்லுமினிக்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனம் ஸ்டேட் வங்கியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆக்ஸிஸ் வங்கியில் நடந்த இந்த ரூ.4,000 கோடி மோசடி வெளியாகி உள்ளது. ஆக்ஸிஸ் வங்கியில் பரேக் அல்லுமினிஸ் லிட் பெயரில் உள்ள வங்கி கணக்கில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் பெயரில் போலி பில்கள் மற்றும் போலியான சிபாரிசு கடிதங்கள் தயாரித்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஆக்ஸிஸ் வங்கி சார்பில் சி.பி.ஐ.யில் புகார் செய்யப்பட்டது. சி.பி.ஐ.யின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி பரேக் அல்லுமினிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் பவார்லால் பண்டாரி, பிரேமல் கோராகாந்தி, கமலேஷ் கானுங்கோ ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து