முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் வலுவான கூட்டாட்சியை உருவாக்க வேண்டும் - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : நாட்டில் வலுவான கூட்டாட்சியை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு வலிமையாக இருக்கும். நமக்கு தேவை வலிமையான கூட்டணி ஆட்சி. தற்போது வலுவான கூட்டணியை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம் - மம்தா

பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணி அமைக்க வேண்டும் என குரல் கொடுத்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். அதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நேற்று சந்திரசேகர் ராவ் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் சந்திரசேகர் ராவ் கூறியதாவது,
பா.ஜ.க, காங்கிரசுக்கு மாற்று தேவை. ஆகையால் 3-வது அணியை அமைக்க முயற்சித்து வருகிறோம். இதர அரசியல் கட்சித் தலைவர்களையும் விரைவில் சந்திப்போம். நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

மம்தா பானர்ஜி கூறுகையில், 71 ஆண்டுகாலமாக நீடித்து வரும் அரசியல் போக்கை மாற்ற நினைக்கிறோம். மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு வலிமையாக இருக்கும். நமக்கு தேவை வலிமையான கூட்டணி ஆட்சி. தற்போது வலுவான கூட்டணியை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தார் மம்தா பானர்ஜி.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து