ரஜினி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பார்: அர்ஜூன் சம்பத் பேட்டி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தேனி
arjune sampath19 3 18

ஆண்டிபட்டி-   ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆட்சி அமைப்பார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
       தேனி மாவட்டம் கண்ட மனூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு புதியதாக கட்சியில் இணைந்த 50 பேர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மேலும் மாவட்ட தலைவராக மந்திச்சுனை  வேல்முருகனை நியமனம் செய்து அறிமுகம் செய்து வைத்தார்.கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் கண்மணிராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு குமார் நிர்வாகிகள் திண்டுக்கல் தர்மர், துரைப்பாண்டி, விக்னேஷ், சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     அர்ஜுன் சம்பத் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, குரங்கணி காட்டுத் தீ பரிதாப சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக அவதுறு பரப்பும் சீமான், வைகோ போன்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அறநிலையத் துறை கோவிலுக்கு சொந்தமான கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்கள் மீட்க வேண்டும். மதுரையில் மதமாற்றம் செய்தவர்களை தடுத்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்ததை கண்டிக்கிறோம். ஆன்மீக அரசியல் நடத்தும் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பார். எங்களிள் முழு ஆதரவு அவருக்கு உண்டு.திராவிடம் என்ற பேச்சு இனி செல்லுபடி ஆகாது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து