முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி, கமலால் எந்த மாற்றத்தினையும் கொண்டு வர முடியாது: ராமதாஸ் பேச்சு

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

காஞ்சீபுரம் : ரஜினி காந்திற்கும் கமல் ஹாசனுக்கும் துளியும் அரசியல் அறிவு இல்லை என காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் ராஜினாமா என்பது தேவையில்லை, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்க முடியும். ரஜினி, கமல் போன்றவர்களால் எந்த மாற்றத்தினையும் கொண்டு வர முடியாது. - ராமதாஸ்

ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்றப் போவதாகக் கூறுகின்றனர். இவர்களால் எந்த மாற்றத்தினையும் கொண்டு வர முடியாது. தினகரன் ஹவாலா பணத்தில் சுற்றி வருகின்றார். இவர்களால் மக்களுக்கு எந்தப்பயனும் இல்லை. நல்ல ஆட்சியினை பா.ம.க. வினால் மட்டுமே தர முடியும். காவிரி விவகாரத்தில் ராஜினாமா என்பது தேவையில்லை, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து