முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே   வெளியிட்டார்.

திட்ட அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி கிளைகள் மூலம் வளம் சார்ந்த கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ.7868.26 கோடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு  நடப்பு 2017-18 -ம் ஆண்டு இலக்கை விட 8.6மூ அதிகமாகும்.  அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 2018-19 - ம் ஆண்டில் வேளாண் பயிர்கடன் ரூ.3138.40 கோடிகளாகவும், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துணை தொழில்களுக்கான கடன் ரூ.1100.27 கோடிகளாகவும், நுண், சிறு மற்றும் குறு  தொழில்களுக்கான கடன் ரூ.1070.39 கோடிகளாகவும், விவசாய கட்டமைப்புகளுக்கான கடன் ரூ.231.47 கோடிகளாகவும், உணவு பதப்படுத்துதலுக்கு கடன் 432.22 கோடிகளாகவும்,  ஏற்றுமதி கடன் 480 கோடியாகவும், கல்விக்கடன் 270 கோடியாகவும், வீடு கட்டுவதற்கு கடன் 362.40 கோடியாகவும், மற்றும் மீள் சக்தி  கடன் 82.73 கோடிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டமானது தேசிய கொள்கைகளான ‘ எல்லா நிலத்திற்கும் நீர்”  மற்றும் ‘ ஒரு சொட்டு நீர், பல கட்டு பயிர்”  என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில்  திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வே.பிச்சை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.விஸ்வநாதன், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) ஜே.மார்டின் பிரகாசம்  மற்றும் அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து