முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் வந்த ராமராஜ்ய ரதத்திற்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பு நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      திருநெல்வேலி
Image Unavailable

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை வழியாக வந்த ராமராஜ்ய ரதத்திற்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமராஜ்ய ரதம் சென்றது.

ராமராஜ்ய ரதம்

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரதயாத்திரை துவங்கியது.  இந்த ரதயாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரள மாநிலம் முழுவதும் சென்றது. ரதம் தமிழகத்திற்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரதயாத்திரை தமிழகத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். ரதம் வருவதையொட்ட்டி செங்கோட்டை, புளியரை, தென்காசி பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. இதனால் முன்எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நெல்லை மாவட்டம் முழுவதும் 32 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் நேற்று காலையில் ராமராஜ்ய ரத யாத்திரை கேரளாவில் இருந்து கோட்டைவாசல், புளியரை வழியாக நெல்லை மாவட்டத்திற்கு வந்தது. இப்பகுதியில் ரத யாத்திரைக்கு இந்து அமைப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் எதிர்கட்சிகள் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்ராமராஜ்யரதம் செங்கோட்டை, பிரானூர் பார்டர், கொட்டாகுளம், இலஞ்சி வழியாக தென்காசிக்கு வந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோவில் முன்பு இந்து அமைப்பின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ரதத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் ராமராஜ்ய ரதம் இடைகால், கடையநல்லூர், கிரு~;ணாபுரம், சொக்கம்பட்டி, புளியங்குடி, சிவகிரி வழியாக விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்றது. ரதத்திற்கு ஆங்காங்கே கூடியிருந்த இந்து அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து