குரங்கணி தீ விபத்து விசாரணைக்கு அதுல்யமிஸ்ரா இன்று வருகை.

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      தேனி
kurangani 20 3 18

 போடி- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உளள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுதீ விபத்தில் சிக்கி பலியான 17 இறப்பு சம்வவம் பற்றிய நீதி விசாரணை செய்திட சிறப்பு விசாரணை அதிகாரி அதுல்யமிஸ்ரா இன்று (21.03.2018) மாலை போடிக்கு வந்து நாளை (22.03.2018) குரங்கணியில் ஆய்வு செய்கிறார்.

போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையான குரங்கணி  மலைப்பகுதியிலுள்ள ஒத்தமரம் பகுதி யில் கடந்த 11 ம் தேதி மாலை 3.30 மணியளவில் காட்டு தீ பரவி கொண்டிருந்த நிலையில் மலையேற்ற பயிற்சிக்கு சென்று திரும்பி கொண்டிருந்த சென்னை மற்றும் கோயமுத்தூர்,ஈரோட்டினை சேர்ந்த 36 பேர்கள் தீவிபத்தின் விபரீதங்களை உணராமல் ஷெல்பி எடுத்து கொண்டிருந்தனர். வேகமாக தீ பரவியதால் அவர்களை நகர விடாமல் சுற்றி வளைத்த காட்டுத்தீ தாக்காமல் இருப்பதற்கு அருகிலுள்ள பள்ளங்களில் குதித்தும் தப்பிக்க முயன்றனர். ஆனால் விடாத தீ சுழற்றியதால் தீயில் சிக்கி, சம்பவ இடத்திலேயே முதல் கட்டமாக 9 பேர்கள் பலியானார்கள். ஆனால் இறப்பு சம்பவம் இரவு வரையில் வெளியிடாமல் மறுநாள் காலை 11 மணியளவில் தான் 9 பேர் இறந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மீத முள்ள 17 பேர்களை மலைகிராம மக்கள் திரண்டு சென்று அவர்களை மீட்டெத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆனால் தொடர்ச்சியாக சிகிச்சை பலனின்றி வரிசையாக ஒவ்வொருவராக பலியாகியதால் சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள் ளது. தீயில் கருகி இறந்து கிடந்த 9 பேர்களை இந்திய இராணுவ ஹெலிகாப்ட்டரில் மீட்டு தேனிமாவட்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிணபரிசோதனை செய்து உறவி னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக சட்டசபையில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்திட உத்தவிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நி லையில் இவர் இன்று மாலை போடிக்கு வருகை தருகிறார் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் என அவர்களை நேரில் சந்தித்து விசாரிக்கிறார். பின்னர் நாளை 22 ம் தேதி வியாழக்கிழமை பலியான சம்பவ இடமான குரங்கணி ஒத்தமரம் பகுதிக்கு சென்று பார்வையிடுகிறார். தொடர்ந்து பல்வேறுபகுதிகளில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.இதனால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் எல்லோரும் அலாட்டாக இருக்கவு-ம் மேல் அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து