காவனூர் புதுச்சேரியில் முதியோருக்கான சட்ட உதவி முகாம்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      காஞ்சிபுரம்
Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா காவனூர்புதுச்சேரி கிராமத்தில் உத்திரமேரூர் வட்ட சட்டப் பணிகள் குழு, சர்வே டிரஸ்ட் மற்றும் குழந்தைகள் கண்காணிப்பகம் இணைந்து முதியோருக்கான சட்ட உதவி முகாம் நேற்று நடத்தியது.

சட்ட பணிகள்

 முகாமில் வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவரும் உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான சச்சிதானந்தம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். சர்வே டிரஸ்ட் நிர்வாகி கலைச்செல்வி, குழந்தைகள் கண்காணிப்பகம் ராஜீ. ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட சட்ட பணிகள் குழுவின் மூத்த நிர்வாகி இராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முதியவர்கள் பாதுகாப்பு சட்டங்கள், முதியோர் உதவிக்கான அரசின் திட்டங்கள், அதனை சட்டத்தின் மூலம் பெரும் முறைகள், முதியவர்கள் பிள்ளைகளிடம் ஜீவனாம்சம் பெறும் முறைகள் குறித்தும் விளக்கிப் பேசப்பட்டது. முடிவில் காவனூர் புதுச்சேரி கிராம முதியவர்கள் தங்களது கோரிக்கைகளை நீதிபதியிடம் மனுவாக வழங்கினர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து