முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளத்தில் இருந்த கோயிலை இடிக்காமல் 50 ஜாக்கிமெஷின் மூலம் உயர்த்தப்பட்டது திருவொற்றியூரில் பஞ்சாப்காரர்கள் சாதனை

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      சென்னை
Image Unavailable

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள ராஜசண்முகம் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

 30 ஆண்டுகளுக்கு

அங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீதேவிகருமாரியம்மன் ஆலயம் உள்ளது கோயில் உள்ளது. 7வது தெருவில் உள்ள இந்த கோயில் காலமாற்றத்தில் உயரமான பகுதிக்கு சென்றது. இதனால் கோயில் இருந்த இடம் பள்ளமானது. இந்த கோயிலை புதுப்பித்து உயர்த்துவதற்கு கிராமத்தலைவர் நா.டில்லிநாயக்கர் ஆலோசனையின் பேரில் கோயில் தலைவர் ஆர்.ஆர்.நாதன் தலைமையில் செயலாளர் வி.ரங்கநாதன், பொருளாளர் கே.ஏகாம்பரம், துணைத்தலைவர்கள் ஆர்.ரங்கராஜன், என்.வீரமுத்து, துணைசெயலாளர்கள் எஸ்..மணி, கே.ரவி, ஆலோசகர் எஸ்.கணேஷ் ஆகியோர் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் பள்ளத்தில் இருந்த கோயிலை இடிக்காமல் கோயிலை உயர்த்துவதற்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பத்து பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய தொகையை வழங்கி மூன்றுஅடி ஆழத்திலிருந்த கோயில் எட்டு அடி உயரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் 50 ஜாக்கிமெஷின்கள், இரும்புதளவடாங்கள் மூலம் கோயிலின் நான்குபுறமும் பொருத்தப்பட்டு எட்டு அடி உயரம் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டது. ஒரே நாளில் இந்த சாதனையை பஞ்சாப் மாநில தொழிலாளர்கள் செய்து சாதனை படைத்தனர். இந்த கோயில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கூரையாக இருந்தது. அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட கருமாரியம்மனுக்கு முதன் முறையாக 1992ம் ஆண்டில் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அதன் பின்பு 2014ல் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போதைய திருப்பணிக்கு ரூ.15 லட்சம் ஓதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தல்வர்சிங் தலைமையில் பத்து பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து பணிகள் செய்ய திருவொற்றிரை சேர்ந்த பி.கணேஷ் செயல்பட்டு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து