கரூர் மாவட்டத்தில் மருத்துவகுணம் கொண்ட ஒரு லட்சம் நொச்சி மரக்கன்றுகள் நடவு செய்ய பணிகள் நடந்து வருகிறது செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் த.அன்பழகன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      கரூர்
Karur

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் கொடையூர், வெஞ்சமாங்கூடலூர் மேற்கு மற்றும் கிழக்கு செங்காடு போன்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட கலெக்டர் த.அன்பழகன், பார்வையிட்டு செய்தியாளர்களுடன் செய்தியாளர் பயணம் மேற்கொண்டார்.

 செய்தியாளர் பயணம்

இந்த செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:காற்று மாசுபடுதல், கொசு உற்பத்தி கட்டுப்படுத்துதல், அதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல், அலர்ஜி, கண் நோய், ஆஸ்துமா, தலைவலி, காய்ச்சல், மூட்டுவலி போன்றவைகளை கட்டுப்படுத்தும் நல்ல மூலிகையாக நொச்சி பயன்பெற்று வருகிறது. அதை கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 50,000 வீடுகள் முதற்கட்டமாக வீட்டுக்கு இரண்டு நொச்சி மரக்கன்று வழங்கப்படவுள்ளன. இதற்காக 8 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.15.88 லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் பதியம் வைத்து பராமரிப்பு செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் மனித சக்தி பயன்படுத்தப்படுகிறது. இதுவரை 35,500 கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டில் சாலையோரங்களில் ஒரு கிலோமீட்டருக்கு 200 மரங்கள் வீதம் 100 கிலோ மீட்டருக்கு 20,000 மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு இதுவரை 18,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

மரக்கன்றுகளை நடவு செய்யவும், கால்நடைகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக் உயிர் வேலிகள் அமைத்து பாதுகாப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைகள் நடைபெற்று கொண்டுள்ளது. இதேபோல் அரசு, புறம்போக்கு இடங்கள், அரசு அலுவலகங்களை சார்ந்த காலியிடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி அமைவிடங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 78,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டு இதுவரை 35,000 மரக்கன்றுகள் நடவு செய்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளில் ஒன்றுகூட விடுபடாமல் அனைத்து மரங்களையும் நல்ல முறையில் பராமரித்து வளர்க்க சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், மீனாகுமாரி, உதவி செயற்பொறியாளர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புமணி, செல்வி, பொறியாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து