முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் நகைக் கடை உரிமையாளர் மீது ரூ.824 கோடி மோசடி: எஸ்.பி.ஐ. புகார்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி,  தனியார் நகைக் கடை உரிமையாளர் புபேஷ்குமார் ஜெயின், ரூ.824 கோடி அளவுக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக சி.பி.ஐ.யிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புகார் அளித்துள்ளது.

கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவதாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ இணை இயக்குநருக்கு பாரத ஸ்டேட் வங்கி எழுதியிருக்கும் 16 பக்க புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

போலியாக வங்கிக் கணக்குகளில் இருப்பு இருப்பதாக கணக்குக் காட்டி கனிஷ்க் நிறுவனம் சார்பில் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் உள்ள ராஜாஜி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் மட்டும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் பெயரில் ரூ.175 கோடி அளவுக்குக் கடன் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசல் மற்றும் வட்டியை கனிஷ்க் நிறுவனம் பாக்கி வைத்துள்ளது.  அந்த வகையில் சென்னையில் இயங்கும் கனிஷ்க் கோல்டு நிறுவனம் எஸ்.பி.ஐ, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளிடம் இருந்து ரூ.824 கோடியே 15 லட்ச ரூபாயை கடனாகப் பெற்று மோசடி செய்ததாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து