முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிட் பண்ட் மோசடி தடுக்க மக்களவையில் மசோதா தாக்கல்

புதன்கிழமை, 21 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சிட் பண்ட் உள்ளிட்ட முதலீட்டு திட்டங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுப்பதற்கான மசோதா மக்களவையில் நேற்று அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது.

‘ஒழுங்கற்ற முதலீட்டு திட்டங்கள் தடை மசோதா - 2018’ என்ற பெயரிலான இந்த மசோதாவை நிதித் துறை இணை அமைச்சர் சிவபிரதாப் சுக்லா தாக்கல் செய்தார்.

பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி பல்வேறு கட்சி உறுப்பினர்கள் நேற்று மக்களவையில் ஈடுபட்டிருந்தபோது, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் மக்களிடம் முதலீடுகளைத் திரட்டி மோசடி செய்வது தொடர்கதையாக இருப்பதால் இதை தடுக்கும் நோக்கத்துடன் மசோதா தாககல் செய்யப் பட்டுள்ளது.

நிர்வாக நடவடிக்கை மற்றும் சட்டங்களில் இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி இதுபோன்ற திட்டங்களை நிறுவனங்கள் செயல்படுத்தி வருவதாகவும் இதனால் ஏழைகள் மற்றும் முதலீட்டாளர்கள் மோசடி செய்யப்படுவதாகவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து