முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்து ஆய்வுக்கூட்டம் மாநில கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 21 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டத்தில் 675 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 6973 நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நான்கு நிலைகளில் நடைபெறவுள்ளது. கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.

ஆய்வுக்கூட்டம்

இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட கூட்டுறவு சங்க அலுவலர்களுக்கு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் தேர்தல் குறித்து அறிவுருத்தியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் சரக துணைப்பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செயற்பதிவாளர்கள் மீன்வளத்துறை, கைத்தறி துணிநூல் துறை, வேளாண்மைத் துறை, கதர்கிராம தொழில் வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை, கூட்டுறவு வீட்டு வசதி துறை, கூட்டுறவு பால் வளத்துறை, மாவட்ட தொழில் மையம், பட்டு வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை ஆகிய பத்து செயற்பதிவாளர்களில் 388 சங்கங்களுக்கும் பதிவாளர் கட்டுப்பாட்டில் 287 சங்கங்கள் ஆக மொத்தம் 675 சங்கங்களில் 6973 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு முதல் கட்டத்தில் நான்கு நிலைகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியல் தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு வாக்காளர் பட்டியல் அலுவலரால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வேப்புமனு தாக்கல் வருகின்ற 26.03.2018 ஆம் தேதியும் வேட்புமனு பரிசீலனை 27.03.2018 ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறுதல் 28.03.2018 ஆம் தேதியும், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். மேலும் தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டத்தில் முதல் நிலையில் 02.04.2018 அன்றும், இரண்டாம் நிலை 07.04.2018 அன்றும், மூன்றாம் நிலை 16.04.2018 அன்றும், நான்காம் நிலை 23.04.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்பு

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் கூட்டுறவு சங்க அலுவலர்களால் எடுக்கப்பட வேண்டும். தற்போது நடைபெறவுள்ள கூட்டுறவுத் தேர்தலில் முதல் முறையாக பொதுத் தேர்தலில் உள்ளது போல் நன்னடத்தை விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் அலுவலர்களாக கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் முதுநிலை ஆய்வாளர், கூட்டுறவு சார்பதிவாளர் அளவிலும், கல்வித் துறையில் ஆசிரியர்கள் மற்றும் இதர துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் முதுநிலை ஆய்வாளருக்கு சமமான பதவியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும்.

தேர்தல் அலுவலர்களாக கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் தேர்தலுக்கான படிவங்கள் அனைத்தும் கூட்டுறவு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் தேர்தல் குறித்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி வகுப்புகளை முறையாக தெரிந்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர் ஓராண்டுற்கு மேலாக சிறை தண்டனை பெற்றிருந்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது. இதுபோன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமுறைகளை அலுவலர்கள் தெரிந்துக்கொண்டு சிறப்பாக எந்த பிரச்சனையின்றி கூட்டறவு சங்க தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டுறவுத் தேர்தலுக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன், (ஓய்வு) 2018 ஆம் ஆண்டு கூட்டுறவு தேர்தல் கையேடு வெளியிட அதனை கலெக்டர் சி.அ.ராமன், பெற்றுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், கூட்டுறவு பதிவாளர் செயலர் ஜான்பீட்டர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, இணை இயக்குநர் (வேளாண்மை) வாசுதேவரெட்டி மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து