கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மையம் கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு

புதன்கிழமை, 21 மார்ச் 2018      திருவண்ணாமலை
photo09

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குச்சாவடி மையம்

ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள், துணைப் பதிவாளர்கள் மாதவி, ஏ.சரவணன், மின்சார துறை செயற்பொறியாளர் (பொது) சிதம்பரநாதன், வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் கே.வெங்கடேசன், த.சுப்பிரமணி, இ.சரவணன், அன்பழகன், ஆர்.விஜயகுமாரி, செயலாளர்கள் என்.அன்பழகன், ஜி.அபிராமன், பி.சிவக்குமார், ஏ.ராமச்சந்திரன், ஜி.ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சியில் அமைந்துள்ள திருவண்ணாமலை மின்திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், திருவண்ணாமலை நகராட்சி, காந்திநகர் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவண்ணாமலை வருவாய் கோட்டம், வருவாய் கிராம உதவியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர் சிக்கனம் மற்றும் கடன் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம், ஆகிய கூட்டுறவு தேர்தல் நடைபெறும் மையங்களில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் ‘தமிழ்நாட்டி கூட்டுறவு தேர்தல் கடந்த 12.3.2018 அன்று அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 789 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக்ககுழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் 777 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முதல் கட்டமாக ஏப்ரல் 2, 7, 16, 23 ஆகிய தேதிகளில் 4 நிலைகளாக நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு தேர்தல் நடைபெறுவது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் முனைவர் மு. ராஜேந்திரன் தலைமையில் கடந்த 20ந் தேதி மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும், கூட்டுறவுத் தேர்தலில் வாக்களிப்பவர்களின் உறுப்பினர்கள் பட்டியல் சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் வெளியிடப்பட்டு, தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது’ என்றார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து