முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா - சென்னையில் நாளை மாலை நடக்கிறது

புதன்கிழமை, 21 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

முதல்வர் - துணை முதல்வர்...

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விழா மிகச்சிறப்புடன் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை ஏற்பார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு சாதனைசிறப்பு மலர், சாதனை விளக்கப் படங்கள், குறும்பாடல்கள், புகைப்படத் தொகுப்பு, முதல்வரின் உரைகள் மற்றும் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டு விழாப் பேருரையாற்றுவார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார்.

அமைச்சர்கள்...

மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்ஜெயக்குமார் அவர்கள், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கின்றனர். மேலும், இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், துணை சபாநாயகர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி புதுடெல்லி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். தலைமைச்செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், வரவேற்புரை ஆற்றுவார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலர் வெங்கடேசன் நன்றி தெரிவிக்கிறார்.

விளக்க கண்காட்சி...

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பள்ளிக் கல்வித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, எரிசக்தித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, உயர்கல்வித்துறை, தொழில் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வேளாண்மைத் துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சிப்பணிகள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும்வகையில் சாதனை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் திறந்து...

இக்கண்காட்சியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இக்கண்காட்சி பொதுமக்களின் பயன் கருதி ஒரு வார காலத்திற்கு இருக்கும். பொதுமக்கள் இக்கண்காட்சியினை கண்டுகளிப்பதோடு, அரசின் திட்டங்களைத் தெரிந்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துசெய்தி மக்கள் தொடர்புத் துறை செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து