முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் இப்போது தான் என்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளேன் - தினேஷ் கார்த்திக் பேட்டி

புதன்கிழமை, 21 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : நான் இப்போது தான் என்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளேன் என்று கூறியுள்ள தினேஷ் கார்த்திக் டோனியுடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

புதிய உத்வேகம்

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

டோனி முதன்மையான இடத்தில் வகிக்கும் பல்கலைகழகத்தில் நான் படித்து வருகிறேன். அதனால் அவருடன் ஒப்பிடுவது சரியல்ல. நான் என்னுடைய பயணத்தை தொடங்கி உள்ளேன். அது (வங்காள தேச அணிக்கு எதிரான போட்டி) எனக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அவரது (டோனி) பயணம் முற்றிலும் வேறுபட்டது.  நான் எப்போழுதும் அவரிடம் இருந்து கற்று கொண்டிருக்கிறேன். அவரையே பார்த்து கொண்டிருக்கிறேன். இன்று அவர் இளைஞர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். அவர் கடந்து வந்த வெற்றி பாதையை பார்த்து மக்கள் நிறைய கற்று கொள்ளலாம்.

கடின உழைப்பு

கிரிக்கெட் வாழ்க்கையில் எனது கடின உழைப்புக்கு கிடைத்த பலனாகவே நான் இதை கருதுகிறேன். அது தான் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க எனக்கு உதவியது. இவ்வளவு ஆண்டுகளில் நான் செய்த அனைத்து நல்ல விசயங்களும் பந்து தான் கூடுதலாக இரண்டு மில்லிமீட்டர் கடக்க உதவியது. இத்தனை ஆண்டுகள் களித்து எனக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது முதல் அப்படிப்பட்ட செயல்களை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

எனக்கு உதவினார்..

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் நாயர் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், அவர் ஆறாக இருந்தார், நான் படகாக இருந்தேன். அவர் காட்டிய வழிகளில் பயணம் செய்தேன். என்னால் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் அவர் செய்ய வைத்தார். போட்டிக்கு தயாராக அவர் எனக்கு உதவினார். அவர் எனக்கு செய்தவற்றை வார்த்தைகளால் கூறிவிட முடியாது. அவர் செய்த தவறுகளை நான் செய்யாமல் அவர் பார்த்துகொண்டார்.

உருவாக்கி...

பேட்ஸ்மெனாக விளையாடுவதையே நான் விரும்பினேன். 20 ஓவர் போட்டிகளில் ஆறாவது அல்லது ஏழாவது இடங்கள் என்னை விளையாட சொல்கின்றனர். சில போட்டிகளை நான் முடித்துள்ளேன். அது மகிழ்ச்சி அளிக்கிறது, அதை தொடர வேண்டும் என்பதே முக்கியம். அதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒருநாள் போட்டிகளில் முன்னதாகவே இறக்கி விடுகின்றனர். நான் அனைத்து விருப்பங்களையும் திறந்து வைத்திருக்கிறேன் மற்றும் சூழ்நிலைக்கேற்ப விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரராக என்னை உருவாக்கிக் வருகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து