முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத யாத்திரையைக் கண்டித்து சாலை மறியல்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு

புதன்கிழமை, 21 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரத யாத்திரை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் ரத யாத்திரை வருவதைக் கண்டித்து கவன் ஈர்ப்புத் தீர்மானத்தை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். ஆனால் அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசும்போது இதை அரசியலாக்க வேண்டாம் என்று பதிலளிக்க முதல்வர் பதிலில் சமாதானமாகாத தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் போட்டனர். பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த மு.க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மறியலில் ஈடுபட்டு கைதான 75 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலக காவல் நிலைய போலீஸார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 75 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

143 (சட்டவிரோதமாகக் கூடுவது), 188 (அரசுப் பணி விதிகளை மீறுதல்) ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளன என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து