முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் பகிர்வு குறித்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் பாராளுமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காவிரி நதிநீர் பகிர்வு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த தமிழகம், கேரளா உட்பட 4 மாநிலங்களும் தயாராக உள்ளன. காவிரி தீர்ப்பு குறித்து நான்கு மாநில பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நதிநீர் பங்கீடு சட்டப்பிரிவு 6ன் படி காவிரி விவகாரம் தொடர்பாக திட்டம் உருவாக்கப்படும் என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க எம்.பி வேணுகோபாலின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார்.
இந்த பதிலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த தகவலையும் தராததோடு, ஒரு செயல் திட்டம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இருக்கும் ஒரே ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்ட தமிழகத்துக்கு தண்ணீர் காட்ட முயற்சிப்பதாகவே மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பதிலில் தெரிய வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து