முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமாக செயலிழக்கம் செய்யப்பட்டன: பிரதாப் ரெட்டி ஒப்புதல்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, துரதிருஷ்டவசமாக சி.சி.டி.வி கேமராக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதாப் ரெட்டியிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தருவதில் அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு கவனம் செலுத்தியது. அப்பல்லோ மருத்துவர்களும், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பாக சிகிச்சை அளித்தனர்.
ஜெயலலிதாவை யார் யார் சந்திக்க வேண்டும் என்பதை உடன் இருந்தவர்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் கூறிய நபர்கள் மட்டும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின் போது உறவினர்கள் சிலர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக அளித்தோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடப்பதால் அதுபற்றி தற்போது எதையும் கூற முடியாது.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் அனைத்தும் துரதிருஷ்டவசமாக செயலிழக்கம் செய்யப்பட்டன. அதனால்தான் அவர் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் எதுவும் இல்லாமல் போனது. ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விடியோ காட்சிகளைப் பார்க்க நேரிடும் என்பதற்காகவே சி.சி.டி.வி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டதாகவும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து