Idhayam Matrimony

செல்போனைத் தேடும் போது தியேட்டர் இருக்கையின் அடியில் தலை சிக்கி இளைஞர் மரணம்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: பிர்மிங்ஹாம், ஸ்டார் சிட்டி பொழுதுபோக்கு காம்ப்ளெக்ஸில் இருக்கும் வியூ சினிமா எனும் தியேட்டர் ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரது மொபைல் போன் கீழே விழுந்திருக்கிறது.

தியேட்டர் இருட்டில் கீழே விழுந்த மொபைலைத் தேடி அவர் இருக்கையினடியில் குனிந்து தேடலில் ஈடுபட்டிருக்கிறார். மொபைல் கிடைத்ததோ இல்லையோ, இளைஞரது தலை இருக்கையினடியில் மாட்டிக் கொண்டது. அவர் எத்தனை முயற்சித்தும் இருக்கையினடியில் இருந்து தனது தலையை வெளியில் எடுக்க முடியவில்லை. தியேட்டரின் இருக்கைகள் அனைத்தும் எளிதில் உடைக்க முடியாத வகையிலான மெட்டீரியலால் தயாரிக்கப்பட்டதாக இருந்ததால் இருக்கையை உடைத்து அவரை மீட்பதும் கடினமாக இருந்திருக்கிறது.

இப்படியொரு விந்தையான விபத்தில் இளைஞர் சிக்கிக் கொண்ட போது அவருடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தவரான அவரது நண்பரும், வியூ சினிமா அலுவலருமான நபர், தனது நண்பரை மீட்கக் கடைசி வரை போராடியிருக்கிறார். ஆனால் தொடர்ந்து இருக்கைக்கு அடியில் காற்றோட்டமும், வெளிச்சமும் அற்ற நிலையில் தலையை வெளியில் இழுத்துக் கொள்ள முடியாமல் போராடிக் கொண்டிருந்ததில் விபத்தில் சிக்கிய நபருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கிறது. ஒருவழியாக அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் ஒரு வாரம் கழிந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்திருக்கிறார்.

இப்படியான விபத்துக்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, இந்த விபத்து எவ்விதம் நிகழ்ந்திருக்க முடியும் என்பதைக் கண்டறியும் விதத்தில் விசாரணை துரிதப்படுத்தப் பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து