முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலம் மாவட்டத்தில் உலக வன நாளை முன்னிட்டு வன குழும மேம்பாட்டு கூட்டரங்கம்

வியாழக்கிழமை, 22 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் உலக வன நாளை முன்னிட்டு வன குழும மேம்பாட்டு கூட்டரங்கம் சேலம் மாவட்டத்தில் உலக வன நாளை முன்னிட்டு வன குழும மேம்பாட்டு கூட்டரங்கம் ரூ.20 இலட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டி ரூ.2.50 இலட்சம் மதிப்பில் வனத் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி வழங்கினார் சேலம் மாவட்ட வன அலுவலகத்தில் இன்று (21.03.2018) உலக வன நாளை முன்னிட்டு வன குழும மேம்பாட்டு கூட்டரங்கத்திற்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டியும், வனத் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பில் உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி வழங்கி பேசியதாவது உலக வன நாள் 1971ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அன்று முதல் உலக வன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக வன தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் காடுகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாக மற்றும் வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காடுகளை பாதுகாப்பதற்கு வனத்துறை மட்டுமல்லாமல் பொது மக்களாகிய உங்களது பங்களிப்பும் அவசியமாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் காடுகளை பாதுகாப்பது மற்றும் காடுகளின் வளர்ச்சி குறித்து புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் காடுகள் பரப்பளவு அதிகரிக்கும் பணிகளில் 2வது இடம் வகிக்கிறது. நமது மாவட்டம் மற்ற மாவட்டங்களுக்கு முன்மாதிரியான மாவட்டமாக திகழ்கிறது. சேலம் என்றால் சைலம் என்று பொருள், சைலம் என்றால் மலைகள், காடுகள் இடம் பெற்றிருக்கும். சேலம் மாவட்டத்தில் 9 மலைகள் உள்ளன. பொது மக்கள் அனைவரும் வனங்களை மேம்படுத்த அடிப்படை கருத்துகளை தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்கள் பொது மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், காடுகளில் வாழும் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்க பொதுமக்களின் சமுதாய பங்களிப்பை வழங்க வேண்டும். ‘சேலம் மாவட்ட பறவைகள்’ (பேர்ட்ஸ் ஆப் சேலம்) என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் சேலம் மாவட்டத்தில் வாழும் பறவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை 3 இளைஞர்கள் சேலம் மாவட்ட பறவைகளை ஆராய்ந்து, அதன் வண்ண புகைப்படத்துடன் புத்தகம் வெளியிட்டுள்ளனர். அதேபோல் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் இயற்கை வளத்தை பாதுகாக்க புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். காடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் வனத்துறை அனுமதியுடன் வனத்துறை அனுமதி வழங்கப்பட்ட பாதையில் சென்று காடுகளுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும். சேலம் மாவட்ட வனப்பகுதியை பசுமையாக மாற்ற மரக்கன்றுகள் நட்டு அவற்றை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களாகிய நீங்கள் காடுகளின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி தெரிவித்தார். முன்னதாக, உலக வன நாளை முன்னிட்டு வன குழும மேம்பாட்டு கூட்டரங்கத்திற்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் அடிக்கல் நாட்டி, வனத் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.50 இலட்சம் மதிப்பில் உபகரணங்களையும், வனத்துறை அலுவலர்களுக்கு வழங்கினர். மரம் நடும் திட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சேலம் மாவட்ட பறவைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற உலக வன நாள் விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அ.பெரியசாமி, சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் மு.மகேந்திரன், மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து