சேலம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் கொடியேற்று விழா

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      ஆன்மிகம்
salem murugan

சேலம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் கொடியேற்று விழா சேலம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் பங்குனி உத்திரத்தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டு சென்றனர்..... சேலம் ஜங்ஷன் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமம், இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் தமிழ் மாதங்களில் பல்வேறு விழாக்களும், நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதே போல இந்த ஆண்டும் பங்குனி மாத நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் வருகின்ற பங்குனி மாத உத்திரம் திருநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதிகாலை முதல் வினாயகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம், மற்றும் பால், இளநீர்,பஞ்சாமிருதம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, அதனை தொடர்ந்து அருள்வாக்கு சோமசுந்தரம் தலைமையில் மஹா ஹோமம் நடைபெற்றது, பின்னர் கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க திருக்கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது, இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கும், கொடிகம்பத்திற்க்கும் பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது, பின்னர் மூலவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது, இந்த வைபவத்தை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபாடு சென்றனர், இந்த வைபவத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த பங்குனி உத்தர வைபவம் தொடர்ந்து பதினோரு நாளைக்கு பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது, விழாவின் முக்கிய நாளான வருகின்ற மார்ச் முப்பதாம் தேதி சனிக்கிழமை மாலை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பங்குனி உத்திரத்திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது, என்பது குறுப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து