முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, லோக்பால் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் தொடங்கியுள்ளார்.

2011-ம் ஆண்டு ஜன் லோக்பால் அமைப்பை உருவாக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே நடத்திய இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாபெரும் ஆதரவு கிடைத்தது. இதையடுத்து லோக்சபால் அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு லோக்பால். இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தை  ஹசாரே கைவிட்டார்.

2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ.கவும் மத்தியில் ஆட்சி அமைத்தால் லோக்பால் அமைப்பு கொண்டு வருவோம் என உறுதியளித்தது. ஆனால் ஆட்சியை கைப்பற்றி 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் லோக்பால் உருவாக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நேற்று முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற போராட்டத்தை அன்னா ஹசாரே மீண்டும் தொடங்கியுள்ளார். இதனால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து