முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ : சங்ககிரி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற கோபுர திருப்பணி துவக்கம்

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சங்ககிரி பவானி மெயின் ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் கருவறை மேல் பகுதியில் விமானம் (கோபுரம்) அமைக்கும் திருப்பணி துவக்கப்பட்டது. கடந்த 1984 ஆம் ஆண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக குரு அருட்திரு அடிகளாரின் உத்தரவு பெற்று சங்ககிரி பவானி மெயின் ரோட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் துவங்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு மன்றத்தில் கருவறையுடன் கூடிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அன்று முதல் தினசரி வழிபாடுகள் நடந்து வருகிறது. தற்போது கருவறையின் மேல் பகுதியில் விமானம் (கோபுரம்) அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோபுர திருப்பணியை முன்னிட்டு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற உறுப்பினர்களால் கோபுர திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் சங்ககிரி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணி, சங்ககிரி அ.தி.மு.க. நகர செயலாளர் செல்லப்பன் ஆகியோர் முன்னிலையில் சங்ககிரி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், கோபுர திருப்பணி குழு உறுப்பினர்கள் ஆனந்தகுமார், பெருமாள், கணேசன், வெங்கடேஷ் திவாகர், தனலட்சுமி உட்பட மன்றத்தினர் பலரும் கலந்து கொண்டனர். வேள்வி பூஜையுடன் அம்மனுக்கு பலவித திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மஹாதீபாராதனை நடைபெற்று குரு கலசம் வைக்கப்பட்டிருந்த பீடத்தின் ஒன்பது செங்கற்களையும் மன்றத்தினர் உதிரி புஷ்பங்கள் போட்டு வணங்கினர். மன்றத்தினர் அந்த செங்கற்களை எடுத்துத் தர கருவறையின் மேல் விமானம் அமைக்கும் திருப்பணி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து