அரியலூரில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      அரியலூர்

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி . நேற்று(24.03.2018) திறந்து வைத்து, அரியலூர் மாவட்டத்தில் அம்மா வழியில் நல்லாட்சி - அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி என்ற மலரினை வெளியிட்டார்கள்.

புகைப்பட கண்காட்சி

இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்கள். இப்புகைப்படக்கண்காட்சியில், தமிழக முதலமைச்சர் அவர்களால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்தி;ட்ட உதவிகள், அம்மா இருக்கரச வாகனங்கள் வழங்கும் திட்டம், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பாக இ - பொது சேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள் மற்றும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், விலையில்லா கறவைப் பசுக்கள், விலையில்லா வெள்ளாடுகள், மற்றும்; கால்நடைகளுக்கு குறைந்த விலையில் தீவனப்புல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சத்துணவுத் திட்டத்தின் மூலம் சத்துமாவு உருண்டை வழங்குதல், திருமண உதவி மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்தி;ட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள், சீருடைகள், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை 4000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை அதநவீன மின்னணு விளம்பரத் திரை வாகனத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் தமிழ அரசின் ஓராண்டு சாதனைகளை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் குறும்படம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே.லோகேஷ்வரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .பழனிசாமி, அரியலூர் நகராட்சி ஆணையர் ஆர்.வினோத், அரசு அலுவலர்கள்; மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) .சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து