தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு மாவட்டங்களில் வணிக வரித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதன்மை செயலாளர் கா.பாலச்சந்திரன், தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      தஞ்சாவூர்
pro thanjai

 

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் வணிக வரித்துறையின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் முதன்மை செயலாளர் (வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர்) கா.பாலச்சந்திரன், தலைமையில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, முன்னிலையில் நேற்று (24.03.2018) நடைபெற்றது.

 ஆய்வுக்கூட்டம்

இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் (வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர்) .பாலச்சந்திரன், தெரிவித்ததாவது,திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வணிக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறித்தும், தற்பொழுது ஜிஎஸ்டி வரியின் கீழ் கட்டப்படும் வரிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படுகிறது. வணிக நிறுவனங்கள் ஒரு பொருட்களை வாங்கும்பொழுது விற்கும் பொழுதும் எலக்ட்ரானிக் பில் (பட்டியல்) மற்றும் கிரிடிட் கார்டு முழுமையாக பயன்படுத்த வணிகர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

எலக்ட்ரானிக் முறையில் பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த வேண்டும். மாநில வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து மாநில வரி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வணிக வரி தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நீதி பேரராணை மனு மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளான பதிலுரை சத்தியபிரமாணம் ஆகியவைகள் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். அப்பொழுது தான் வணிக வரி தொடர்பாக உயர் நீதி மன்றங்களில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவை நீக்க முடியும். எனவே, உடனடியாக சம்மபந்தப்பட்ட அலுவலகங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்குமானால் அரசு வழக்கறிஞரை கலந்தாலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதன்மை செயலாளர் (வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர்) .பாலச்சந்திரன், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திருச்சி கோட்ட இணை ஆணையர்கள் (மாநில வரிகள்) (முழு கூடுதல் பொறுப்பு) பெ.சிற்றரசு, (மாநில வரி) (செயலாக்கம்) இரா.கருணாநிதி, தஞ்சாவூர் மாவட்ட மாநில வரி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து