முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி கலெக்டர் வே.சாந்தா திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 24 மார்ச் 2018      பெரம்பலூர்
Image Unavailable

 

தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்று சேரும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள் நடத்துதல், மாதந்தோறும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட அரசு விழாக்களின் தொகுப்புகளை உள்ளடக்கிய சிறு புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

  ஓராண்டு சாதனை

 அந்த வகையில் தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவு விழாவை பல்வேறு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள், சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் நடத்தப்பட்ட தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சி நேற்று (24.03.18) பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இப்புகைப்பட கண்காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

 இக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் அரசு விழாக்களில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்; கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்;ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

பின்னர் தமிழக அரசின் ஓராண்டு சாதனையினை விளக்கும் வகையில்; செய்தி மக்கள் தொடர்புத் துறையால் அனைத்துத்துறைகளின் சாதனைத்தொகுப்புகள், புகைப்படங்கள் அடங்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள "அம்மா வழியில் நல்லாட்சி அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி" என்ற கையேட்டினை மாவட்ட கலெக்டர் nவிளயிட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அதனை பெற்றுக்கொண்டனர். மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக்குழுவினர் 70 நபர்களுக்கு மரக்கன்றுகளையும், சாதனை விளக்கக் கையேட்டினையும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட வன அலுவலர் அசோகன், வருவாய் கோட்டாட்சியர் சேதுராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், பெரம்பலூர் நகராட்சி ஆணையர்(பொ) பிரகாஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதி, சுதாகர், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், பாரதிவளவன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து