ஏப்ரல் 2-ந்தேதி வங்கி சேவை கிடையாது

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      வர்த்தகம்
State Bank of India 2017 04 03

வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்று வாட்ஸ்-அப்பில் தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் தவறானது என்று வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:

வருகிற 29 மற்றும் 30-ம் தேதிகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமறை விடப்பட்டுள்ளது. 31-ம் தேதி (சனிக்கிழமை) 5-வது சனிக்கிழமையாகும். அன்றைய தினம் வழக்கம் போல் வங்கிகள் செயல்படும். வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் மேற்கொள்ளலாம். ஏப்ரல் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறையாகும். ஏப்ரல் 2-ந்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம். அதனால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஏதும் மேற்கொள்ளப்படமாட்டாது. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பது தவறான தகவலாகும். சனிக்கிழமை வங்கிகள் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து