தமிழ்நாடு அரசு கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அரசு நிதி உதவி

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      திருவள்ளூர்
Tvallur photo1

உணவு தானிய உற்பத்தி இரண்டு மடங்கு பெருகவும் அதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு அதிகரிக்க செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாணமைத்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. தற்போது கூட்டுப்பண்ணையம் திட்டம் அறிவிக்கப்பட்டு இத்திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்திற்கு வேளாண் துறை மூலம் 225 உழவர் ஆர்வாளர் குழுக்களும், தோட்டக்கலை துறையில் 55 உழவர் ஆர்வளர், குழுக்களும் ஆக மொத்தம் 280 உழவர் ஆர்வளர் குழுக்கள் உள்ளடக்கிய 56 உழவர் உற்பத்தியாளர் குழு திருவள்ளுர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்கள்

 இக்குழுக்கள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுக்கு ரூ. 5 இலட்சம் வீதம் 56 குழுக்களுக்கு ரூ. 2.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டடுள்ள நிலையில் ஓவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவும் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் தாங்களாகவே தெரிவு செய்து கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக மாவட்ட கலெக்டர் தலைமையில், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் 12.03.2018 வேளாண் இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பல்வேறு முன்னனி நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு விலை பட்டியலுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளர் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. அவ்வமையம் ஓவ்வொரு குழுவும் இயந்திரங்களின் விலை விவரத்தோடும் தெரிவு செய்யபட்ட ஓவ்வொரு இயந்திரத்தையும் நிறுவனங்களிடம் நேரடியாக பேரம் பேசி விலை நிர்ணயம் செய்ய கூட்டம் நடைப்பெற்றது.

அதன் அடிப்படையில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தாங்களுக்கு தேவையான இயந்திரங்கள் வாங்க அரசு வாங்கும் ரூ. 5 இலட்சம் தொகுப்பு நிதி ஒதுக்கீடு தற்போது விடுவிக்கப்பட்டது. அதற்கான வேளாண் இயந்திரங்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் தலைவர்கள் எம்.எம்.முரளி,கங்காதரன்,ஏழுமலை ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி திருவள்ளுர், கடம்பத்தூர் மற்றும் பூண்டி வட்டார குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியல் வேளாண்மை இணை இயக்கநர் பாண்டியன்,வி.ஜே.அக்ரோ நிர்வாகி எம்.பிரான்சிஸ்,துணை இயக்குநர் எபினேசன் உட்பட வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து