சுண்ணாம்புகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      சென்னை
G pundi

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம புகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா,விழா மலர் வெளியிட்டு விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

 இந்த ஆண்டு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் எஸ்.எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சுண்ணாம்புகுளம் ஊராட்சி முன்னாள் தலைவர்கள் அரசு. தேசப்பன், பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராம கல்வி குழு நிர்வாகிகள் சரஸ்வதி, கிரிஜா முன்னலை வகித்தனர்.

ஸ்மார்ட் வகுப்பு

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முனிராஜசேகர், சமூக சேவகரும் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவருமான செல்வராஜ். வட்டார வள மைய மேற்பார்வையாளர் புனிதவதி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சுண்ணாம்புகுளம் அரசு தொடக்கப் பள்ளியானது மிக சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்று பாராட்டை பெற்றுள்ளனர். மேலும் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழாவில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ கே.எஸ்,விஜயகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வாழ்த்துரைகளுடன் கூடிய பள்ளி மாணவர்களின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட விழா மலர் வெளியிடப்பட்டது.

இதனை முன்னாள் ஒன்றிய துணை தலைவர் எஸ்.எம்.ஸ்ரீதர் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்வி குழு நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து