பொன்னேரி உ.நா.அரசு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      திருவள்ளூர்
P neri

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி [தன்னாட்சி] நெடுங்கால வரலாறு கொண்டதாகும்.பல்வேறு துறைகளில் பணிபுரியும் பலரை இக்கல்லூரி உருவாக்கியுள்ளது.

கலைகல்லூரி

1965 ஆம் ஆண்டு கொடையாளர்கள் உலகநாதன் மற்றும் நாராயணசாமி ஆகியோர்களின் பெரும் முயற்சியால் துவக்கப்பட்ட இக்கல்லூரி அரசு திட்டங்கள் அனைத்தும் கொண்ட கலைகல்லூரியாக இருந்து நாளடைவில் அறிவியல் மற்றும் கணினி உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளையும் கொண்ட தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கி வருகின்றது. தற்போது சுமார் 4000 மாணவ,மாணவிகளுக்கு மேல் பயிலும் இக்கல்லூரி முதல் தர [கிரேட்-1] நிலையில் வளர்ச்சி அடைந்து வருகின்றது.தேசிய தர மதிப்பீட்டுக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் நிலைக்கு இக்கல்லூரியினை வளர்ச்சி பெறும் நோக்கில் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியக்கழகம் மற்றும் பழைய மாணவர் சங்கங்களை வலுவடைய முயற்சிகள் கல்லூரியின் முதல்வர் முனைவர் கருப்பன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 இதன் பொருட்டு 1965 முதல் 2017 வரையில் இக்கல்லூரியில் பயின்ற அனைத்து மாணவர்களையும் அழைத்து கல்லூரியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் சங்க கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஆலோசனைக்குழு,செயலாக்க குழு,தகவல் தொடர்பு பரிமாற்றக்குழு,வரவு,செலவு கணக்கு குழு,பொருளாளர் குழு,களப்பணி குழு,கூட்ட செயற்பாட்டுக்குழு,நிதி ஆதார கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்களுக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டி விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. இதில் பழைய மாணவர்கள் சங்கப் தற்காலிகப் பொறுப்பாளர்கள் செந்தில்நாதன்,தாளமுத்து நடராஜன்,நடராஜன்,பாலசந்தர் கொண்ட குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

இந்த கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கருப்பன் தலைமை தாங்கினார்,கல்லூரின் தேர்வு ஆணையர் திருச்சேரன் முன்னிலை வகித்தார்.கல்லூரிக்கு இடத்தை வழங்கிய உலகநாதன் மகன் ரவிசந்திரன் மற்றும் ஒய்வு பெற்ற பேராசிரியர் நடராஜன்,முதல் கல்லூரி செயலர் ஆனந்தன்,கல்லூரி கலையரங்கம் அமைத்துக்கொடுத்த முன்னாள் சேர்மன் அனுப்பம்பட்டு சார்லஸ் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள்,வழக்கறிஞர்கள்,சமூக பணியாளர்கள் என பழைய மாணவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து