முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ஜெயந்தி நலமாக உள்ளார் மகன் கிருஷ்ணகுமார் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      சினிமா
Image Unavailable

பெங்களூரு: பழம்பெரும் நடிகை ஜெயந்தி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகிய ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

73 வயதாகும் ஜெயந்தி, அதீத மூச்சுத் திணறலால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். கடந்த 35 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்தத் தகவலுக்கு ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வரும் விக்ரம் மருத்துவமனை நிர்வாகமும் அவர் இறந்ததாக வந்த செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து