விபத்து நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      திருநெல்வேலி
Collector Sandeep Nanduri presented complimentary certificates to the 108 ambulance service at the time of the accident

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் விபத்து நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்து உயிர்காக்க உதவி செய்த நல் உள்ளங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா  நடைபெற்றது.

சான்றிதழ்கள் வழங்கும் விழா

இவ்விழாவில்  கலெக்டர் சந்தீப் நந்தூரி,  கலந்து கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில்  விபத்து நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்து உயிர்காக்க உதவி செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்பின்னர் கலெக்டர்  பேசியதாவது:-நமது மாநிலத்தில் மட்டுமின்றி நமது தேசத்திற்கே 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் மட்டும் 39,316 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்பதை வைத்தே இதன் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் 31 ஆம்புலன்ஸ்கள், 2 பச்சிளம் குழந்தைகள் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்கள், 3 செயற்கை சுவாசம் அளிக்கும் அதிநவீன உபகரணங்கள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், 1 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்சும் 108  செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் விபத்து காலத்தில் 6,917 நபர்களும், கர்ப்பிணி பெண்கள் 2,585 நபர்களும் பயன்பெற்றுள்ளனர். விபத்து காலங்களில் காயமடைந்தவர்களின் உயிரைகாக்க ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமாகும். 108 ஆம்புலன்ஸ்க்கு உடனடியாக தகவல் தெரிவிப்பதன் மூலம் உயிர்களை காப்பாற்ற உதவிட முடியும். நிறைய நபர்கள் பயம் காரணமாக உதவாமல் செல்லும் நிலையில் உள்ளார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் தைரியமாக தகவல் தெரிவிக்க அதிகமான நபர்கள் முன்வருவார்கள். 108 க்கு தகவல் தெரிவித்தால் நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை,  காவல்த்துறையினர் எதுவும் கேட்கமாட்டார்கள், நமக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்து உயிர்காக்க உதவிய உங்களுக்கு இது சிறிய பாராட்டு, சான்றிதழ் தான் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிக உயிர்களை காப்பாற்றிட வேண்டும். என பேசினார்.   இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், தமிழ்நாடு 108 செயல் தலைவர் முகமது பிலால், நாங்குநேரி ஆரம்ப சுகாதார நிலைய  மருத்துவ அலுவலர் மரு.வெங்கடேஸ்வரன், 108 விழிப்புணர்வு துறைத் தலைவர் பிரபுதாஸ், 108 திருநெல்வேலி மாவட்ட மேலாளர் ரஞ்சித், மாவட்ட சுகாதார கல்வி ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து