தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      தேனி
tneni collecter 27 3 18

    தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ், தலைமையில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், தேனி மற்றும் உத்தமபாளைம் ஆகிய 5 வட்டங்களில் ஆதிதிராவிடர் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஆதிதிராவிடர் நல விடுதிகள், பள்ளிகளின் செயல்பாடுகள், ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை விபரங்கள்,  காவல் நிலையங்களில் ஆதிதிராவிடர் நலன் சார்ந்த வழக்குகளின் விபரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்கள், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில்,
தமிழக அரசு ஆதிதிராவிடர் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் மாவட்ட  ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு உறுப்பினர்கள் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்கள் பயிலும் பள்ளிகள், விடுதிகளை தொடர்ந்து கண்காணித்து தரும் அறிக்கையின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவல் நிலையங்களில் ஆதிதிராவிடர் நலன் சார்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தி ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன்  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தி.கிருஷ்ணவேனி  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்  மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் அறிவானந்தம்  கணபதி  பிரபாகர்  குலாம்  ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து