புதிய வடிவிலான சட்ட சேவை முகாமில் ரூ.13.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் நீதிபதி எஸ்.கருப்பையா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      கன்னியாகுமரி
Judge S  Kruppiah provided assistance to benefit Rs  13 31 lakh in a new form of legal service camp

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில்  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குழித்துறை வட்ட சட்டப்பபணிகள் குழு இணைந்து நடத்திய புதிய வடிவிலான சட்ட சேவை முகாம் மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  எஸ்.கருப்பபையா  தலைமையிலும்,  கலெக்டர் பிராசந்த் மு.வடநேரே  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்                       மா.ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

புதிய வடிவிலான சட்ட சேவை முகாம்

இந்நிகழ்ச்சியில் தழிழ்நாடு அரசின் அனைத்துதுறைகளின் சார்பாக இதில் வருவாய் துறை, வேளாண்மை துறை, தோட்டகலைத் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுற்றுசூழல் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை,  சமூக நலத்துறை, மாற்றுதிறனாளிகள் மற்றும் ஊனமுற்றோர் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, காப்பீடுத்திட்டம, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கல்வித்துறை, தாட்கோ, போக்குவரத்துத்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, பிற்படுத்தப்பட்டோர்த்நலத்துறை, வனத்துறை என 32 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் பற்றி விவரிக்க அங்காடிகள் அமைத்து காட்சிப்படுத்தியும, துறை அலுவலர்கள் மூலம் விவரித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் இரண்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடாக ரூபாய்.15,01,622 மனுதார்களின் வங்கி கணக்கில் மாற்றம் செய்யப்பட்டதிற்கான ஆணை, ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் இருபது பயனாளிகளுக்கு நலிந்தோர் உதவி தொகையும், தொழிலாளர் நலத்துறை மூலம் 61 பயனாளிகளுக்கு திருமணம, ஓய்வூதியம, இயற்கை மரணம் ஆகிய நலத்திட்டங்களுக்கு ரூ.6,61,000 மதிப்பிலான உதவிகளும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.60,000 மதிப்பிலான ஸ்குட்டர் ஏழு பேருக்கும, ரூ.30,000 மதிப்பிலான நவீன செயற்கை கால் ஐந்து பேருக்கும, மூன்று சக்கர மிதிவண்டி ஒரு நபருக்கும,  வங்கி கடன் மானியம் ரூ.10,000 வீதம் பத்து பேருக்கும் ஆக மொத்தம் ரூ.13,31,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 12 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.முன்னதாக, சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் குழித்துறை வட்ட சட்டப்பணிக்குழு  அ.பசும்பொன் சண்முகையா வரைவேற்புரையாற்றினார். சார்பு நீதிபதி மற்றும் குழித்துறை வட்ட சட்டப்பணிக்குழு தலைவர் எஸ்.பத்மா நன்றியுரை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து