தஞ்சாவூரில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2018      தஞ்சாவூர்

 

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு அரையாண்டிற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்றது.

 கூட்டம்

 இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளின் மீதான அரசுத் துறைகளின் பதிலறிக்கைகள் இங்கு பரிசீலிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களுக்கு வருகை தரும் பொது மக்களிடம் கனிவோடு பேசி, அவர்களது கோரிக்கைகள் குறித்து தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து