முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 28 மார்ச் 2018      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை. - சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகிச்சிபட்டி ஊராட்சியில்  அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் புதிய வழித்தடத்திற்கான பேருந்து துவக்க விழா நிகழ்ச்சி மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  .ஜி.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  புதிய வழித்தடத்திற்கான பேருந்தை துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
         முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சியுடன் சிறப்பாக தமிழகத்தை நன்கு வழி நடத்திச் செல்லும்  தமிழ்நாடு முதலமைச்சர்   கிராம மக்கள் மீது தனி அக்கறை கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் கிராமப்பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்து தேவையான நலத்திட்டங்களை வழங்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் மூலம் இப்பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக பேருந்து வசதி கூடுதலாக அமைத்துத்தர கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அரசு பேருந்தை இப்பகுதிக்கு வழித்தடம் நீட்டிப்பு செய்து இயக்கும் வகையில் இன்று முதல் சோனைப்பட்டி, அழகிச்சிப்பட்டி, மேட்டுப்பட்டி, தேவன்கோட்டை கிராம மக்கள் சிவகங்கை மற்றும் மேலூர் சென்று வர பேருந்து இயக்கப்படுகின்றன. இதற்கு முன்பு இப்பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று மலம்பட்டி வழித்தடத்திலிருந்து சிவகங்கை அல்லது மேலூர் செல்ல வேண்டும். அதனைப்போக்கும் விதமாக மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றுப்பட்டுள்ளது.
          தொடர்ந்து இப்பகுதியில் தண்ணீர்பற்றாக்குறையை போக்கும் விதமாக தேவன்கோட்டை மற்றும் அழகிச்சிப்பட்டியில் ஆழ்துளை கிணறு அமைத்திடவும் ஏறு;பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கூட கட்டிடங்களில் உள்ள ஓடுகளை சீரமைத்து தந்திடவும், தார் சாலைகளையும் வெகுவிரைவில் சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
      முன்னதாக மலம்பட்டி-தமறாக்கி இடையே ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கும் மற்றும் மலம்பட்டி-ஒக்கப்பட்டி இடையே ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கும், அழகிச்சிப்பட்டி ஊராட்சியில்  ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கான பணிக்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையினை  என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து